கொரானா வைரஸ் காரணமாக தங்கள் வீடுகளில் அடைந்து கிடைக்கும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக, அவர்களைப் புதுமையான படைப்புத் திட்டங்களில் ஈடுபடுத்துவதற்காக காந்திநகர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஐசக் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
1665 ஆம் ஆண்டில் லண்டனில் ஏற்பட்ட பெரும் பிளேக் நோயின் காரணமாக கேம்பிரிட்ஜின் டிரினிட்டி கல்லூரியால் சர் ஐசக் நியூட்டன், இப்போது ஏற்பட்டது போல், வீட்டிற்கு அனுப்பப் பட்டார். இதனாலேயே இத்திட்டம் அவரது பெயருடன் துவங்கப் பட்டுள்ளது.
உலகளாவிய அளவில் ஒரு தொற்றுநோய் பரவியுள்ள இந்நேரத்தில் மாணவர்களை திட்டங்களில் ஈடுபடுத்துவதற்கான வழிகளை ஆராய உலகளாவிய கல்வி நிறுவனங்களுக்கு ஐசக் திட்டமானது ஒரு முன்மாதிரியாக விளங்கும்.